பாவம்யா அந்த அண்ணன்.! பள்ளியில் சேரும் வயதையே அடையாத சிறுமி தனது அண்ணனை ஆசிரியர்களிடம் போட்டுக் கொடுக்கும் வீடியோ.!

பாவம்யா அந்த அண்ணன்.! பள்ளியில் சேரும் வயதையே அடையாத சிறுமி தனது அண்ணனை ஆசிரியர்களிடம் போட்டுக் கொடுக்கும் வீடியோ.!


young-child-complaint-on-teacher-about-her-brother


தற்போதைய தலைமுறையில் உள்ள குழந்தைகள் மிகவும் சார்பாக உள்ளனர். 80கிட்ஸ் குழந்தைகளெல்லாம் கால்குலேட்டரை பார்த்தாலே பயந்த காலம் அது. கால்குலேட்டர் என்பது ஏதோ கம்ப்யூட்டர் மெஷின் போல, இதை நாம் அமுக்கினால் ஏதாவது கெட்டுப்போய்விடும் என நினைத்து அதனை தொட கூட மாட்டார்கள்.

ஆனால் தற்போதைய குழந்தைகள் பெற்றோர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு, செல்போன்களில் பல விஷயங்களை தெரிந்து வைத்து உள்ளனர். தற்போதைய குழந்தைகளுக்கு துணிவும் சற்று அதிகம் என்றே கூறலாம். இந்த நிலையில் பள்ளியில் சேராத வயதிலிருக்கும் குழந்தை ஒன்று அவரது சகோதரனை பள்ளி ஆசிரியர்களிடம் போட்டுக் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த சிறுமி ஆசிரியர்களிடம் எனது அண்ணன் எப்ப பார்த்தாலும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டே இருக்கின்றான். செல்போனை எனக்கு கொடுக்கவே மாட்டேங்குறான். அவன நல்லா அடிங்க சார். நான் எதுவும் உங்களை கேட்க மாட்டேன் எனக் கூறுகிறார் அந்த சிறுமி. சிறுமியின் பேச்சைக் கேட்ட ஆசிரியர்கள் பலரும் சிரிக்கின்றனர். இந்த சிறுவயதில் இந்த சிறுமி இவ்வளவு தெளிவாக பேசுகின்றாள் என சக ஆசிரியர்களும் சிறுமியின் பேச்சை கேட்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.