பாவி மகளே.... சிறுவனுக்கு சங்கிலி பறிப்பு பயிற்சி கொடுத்த பெண்.! போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

பாவி மகளே.... சிறுவனுக்கு சங்கிலி பறிப்பு பயிற்சி கொடுத்த பெண்.! போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!



young-boys-involved-in-robbery

சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த பார்வதி என்ற 65 வயது நிரம்பிய பெண் கடந்த 20-ந்தேதி அசோக்நகர் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மூதாட்டியை தாக்கி, அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து சென்றனர். இதனையடுத்து அப்பெண் இதுகுறித்து கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இதனையடுத்து அந்த சிறுவனை பிடித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

11-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் கொரோனாவால் பள்ளி படிப்பை தவிர்த்து கஞ்சா போதைக்கு அடிமையாகியுள்ளான். இந்தநிலையில் அந்த சிறுவனின் நண்பன் ஒருவன் சமீபத்தில் சங்கிலி பறிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இதனையடுத்து சிறையில் உள்ள அந்த இளைஞனை ஜாமீனில் எடுக்க முடியாமல் அவரது பெற்றோர் சிரமப்பட்டதாகவும், இதனால் நண்பனை ஜாமீனில் எடுப்பதற்காக, தான் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளான்.

மேலும், போலீசாரிடம் சிக்காமல் சங்கிலி பறிப்பது எப்படி என்பது குறித்து பெண் கஞ்சா வியாபாரி ஒருவர் சிறுவனுக்கு பயிற்சி கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சிறுவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டால் தண்டனை குறைவு, விரைவில் வெளியே வந்துவிடலாம் என்று அந்த பெண் கஞ்சா வியாபாரி சிறுவனுக்கு பயிற்சி கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.