கணவரை பிரிந்து வாழும் பெண்ணுடன் 23 வயது இளைஞனுக்கு தொடர்பு.! கள்ளக்காதலி வீட்டில் தற்கொலை.!
சென்னை, புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் ஜடாராஜா. 23 வயது நிரம்பிய இவர் தண்டையார்பேட்டை மண்டலம், 36-வது வார்டில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும், தன்னுடன் பணிபுரியும், கணவரை பிரிந்து வாழும் கொடுங்கையூரைச் சேர்ந்த 36 வயதான துப்புரவு பெண் தொழிலாளிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஜடாராஜா அடிக்கடி தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கொடுங்கையூர், திருவள்ளூர் சாலையில் வசிக்கும், கள்ளக்காதலி வீட்டில், நேற்று ஜடாராஜா, மின் விசிறியில் துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கொடுங்கையூர் போலீசார், ஜடாராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வெய்த்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.