தமிழகம்

தோழியை காதலிப்பதாக கூறி, நண்பர்களுடன் சேர்ந்து இளம்பெண்ணை சீரழித்த இளைஞன்!.

Summary:

young boy raped young girl with his friend


திருநெல்வேலி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் அங்கிருக்கும் கணினி மையத்தில் படித்து வந்துள்ளார். இவருக்கும், வாணியங்குளத்தைச் சேர்ந்த சுந்தர் என்ற ஜேசிபி ஆபரேட்டருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவரும் தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டு  வாட்ஸ் ஆப்பில் பேசி வந்துள்ளனர். பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது.
இந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை காலையில், கணினி மையத்துக்கு சென்ற அந்த பெண், வீடு திரும்பாததால், பெற்றோர்கள் தேட ஆரம்பித்தனர்.

இதனையடுத்து காவல்துறையில் புகார் அளித்தனர். பின்னர் காட்டுப் பகுதியில், இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் பின் அங்கு சென்று பார்த்த போது அது காணாமல் போன பெண்ணின் சடலமாக இருந்தது.

இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் இளம்பெண்ணை காதலிப்பதாகக் கூறி, காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற சுந்தர், அங்கு தமது நண்பர்களுடன் சேர்ந்து, பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் இளம்பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சுந்தரையும், அவனது நண்பர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement