தமிழகம்

கள்ளக்காதலுக்கு இடையூறு.. கண்ணில் மிளகாய் பொடி தூவி.. நெருப்பால் சூடுபோட்டு கொல்லப்பட்ட சிறுவன்.! தாய், கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது.!

Summary:

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா, கொட்டிலேட்டி கிராமத்தில் இருந்து உச்சன்கொல்லைக்கு செல

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா, கொட்டிலேட்டி கிராமத்தில் இருந்து உச்சன்கொல்லைக்கு செல்லும் வழியில், மல்லேஸ்வரன் மலை அடிவாரத்தில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி, சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தான். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனின் அடையாளம் தெரியவில்லை. 

இதனையடுத்து உயிரிழந்த சிறுவனின் சடலத்தின் போட்டோவை பக்கத்துக்கு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா போலீசாருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிக்கும் தனலட்சுமி என்பவர் பெங்களூரு காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி, தனது மகள் நதியாவின் மகன் ராகுல் (10) என்பவனை கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணவில்லை என்று புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து போலீசார் பிப்ரவரி மாதம் காணாமல் போனதாக பதிவான வழக்குகள், புகைப்படங்களை பார்த்தனர். இதில் திடீர் திருப்பமாக பர்கூரில் கொலை செய்யப்பட்டு கிடந்த சிறுவனின் புகைப்படத்தை காண்பித்த போது அது பெங்களூருவை சேர்ந்த ராகுல் என உறுதி செய்தனர். 

இதை தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சிறுவன் ராகுலை அவனது தாய் நதியா, கள்ளக்காதலன் சுனில்குமார் (30), இவரது மற்றொரு கள்ளக்காதலி சிந்து (25) ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பெங்களூரு போலீசார் கைது செய்தனர். 

கைதான சுனில்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சுனில்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில், கணவரை பிரிந்து வாழ்ந்த நதியாவிற்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. ராகுல் குழந்தையாக இருந்த போது எங்கள் உறவுக்கு பிரச்சினை இல்லாமல் இருந்தது. ஆனால் அவன் வளர வளர எங்களுக்கு இடையூறாக இருந்தான். இதனால் ஏற்பட்ட கோபத்தில் நானும் நதியாவும் சிறுவன் ராகுலை அவ்வப்போது பிரம்பால் அடித்தும் சூடு வைத்தும், கண்ணில் மிளகாய் பொடி தூவியும் சித்திரவதை செய்து வந்தோம்.

இந்தநிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுவன் ராகுலை நான் அடித்து கொன்றேன். எனது மற்றொரு காதலி சிந்துவுடன் ஒரு காரில் ராகுலின் சடலத்தை எடுத்து தமிழ்நாட்டில் வீசிவிட்டேன் என கூறியுள்ளார். இதையெல்லாம் மறைத்து நதியா ஒன்றும் தெரியாதது போல நாடகமாடியிருக்கிறார். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் பெங்களூரு சிறையில் அடைத்தனர்.


Advertisement