திருமணமாகாத இளைஞனை தூக்கில் தொங்கவிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 மருமகள்கள்.! அதிர்ச்சி பின்னணி.!young boy kiled by two women

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள செருநல்லூர் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் அவர் அதே பகுதியை சேர்ந்த 22 வயது நிரம்பிய அய்யப்பன் என்பது தெரியவந்தது.

அய்யப்பன் தூக்கில் தொங்கியதற்கான காரணம் குறித்து மேற்கொள்ளபட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. செருநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த அண்ணன் தம்பிகளான ஆனந்தன் மனைவி ரஜிபாணி மற்றும் அன்பரசன் மனைவி கவுதமி ஆகிய இருவரும் உறவினர்கள். ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரிடமும் அய்யப்பன் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்துள்ளார்.

young boyஇந்தநிலையில், சம்பவத்தன்று இரவு மது போதையில் ரஜிபாணி வீட்டிற்கு வந்த அய்யப்பன் ரஜிபாணியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில் ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரும் சேர்ந்து போர்வையால் அய்யப்பனின் கழுத்தை இறுக்கியுள்ளனர். இதனால் மயக்கமடைந்த அய்யப்பனை அவர்களது வீட்டின் பின்புறம் உள்ள கருவேலமரத்தில் ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரும் சேர்ந்து தூக்கு மாட்டி தொங்கவிட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்