சாலையில் நடந்துவந்த 14 வயது சிறு‌வன்! பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் கால்வைத்து சம்பவ இடத்திலேயே பலி!

சாலையில் நடந்துவந்த 14 வயது சிறு‌வன்! பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் கால்வைத்து சம்பவ இடத்திலேயே பலி!


young boy died in mugalivakkam


சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கம் சுபஸ்ரீ நகரைச் சோ்ந்தவர் செந்தில். இவரது மூத்த மகன் தீனா, அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். தீனாவின் தந்தை செந்தில் ஷோ் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.

14 வயது சிறுவன் தீனா இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்ற போது தனம்நகரில், மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் கொண்டு செல்வதற்காக தோண்டிய பள்ளங்களை சரியாக மூடாததால், சாலையின் கீழே புதைக்கப்பட்டிருந்த மின் வயர் வெளியே வந்துள்ளது. அது தெரியாமல், பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் கால் வைத்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. சம்பவ இடத்திலே அந்த சிறுவன் உயிரிழந்தான். 

electric shock

இதுகுறித்து தீனாவின் தந்தை அளித்த புகாரின்பேரில் சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் செந்தில், உதவி மண்டலப் பொறியாளா் பாலு ஆகியோர் மீது மாங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து மின்வாரியம் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தும், 2மணி நேரம் கழித்தே நிகழ்விடத்திற்கு வந்ததாக‌ ஆதங்கப்படுகின்றனர் அப்பகுதி பொதுமக்கள். மேலும் சிறுவனின் மரணம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.