தமிழகம்

சகோதரியுடன் மகிழ்ச்சியுடன் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன்..! நொடிப்பொழுதில் அரங்கேறிய சோகம்.! கதறும் பெற்றோர்..!

Summary:

young boy died in chrompet

சென்னையில் உள்ள குரோம்பேட்டை நெமிலிசேரி பகுதியை சார்ந்தவர் செல்வராஜ் என்பவர் கூலிவேலை செய்துவருகிறார். இந்த நிலையில், இவரது வீட்டிற்கு அருகே வசித்து வருபவர் செல்வராஜின் உறவினரான லட்சுமணன்

அப்பகுதியில் லட்சுமணன் புதியதாக வீடு ஒன்றை கட்டி வரும் நிலையில், வீட்டின் முன்பு செல்வராஜின் ஆறு வயது குழந்தை சந்தோஷ்குமார் தனது சகோதரியுடன் விளையாடிக்கொண்டு இருந்துள்ளான். இந்நிலையில், சிறுவன் எதிர்பாராத விதமாக அங்குள்ள 14 அடி ஆழமுள்ள நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்துள்ளான்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தொட்டியில் இறங்கி குழந்தையை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு சென்று பரிசோதித்தபோது குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை இறந்த செய்தி கேட்டு செல்வராஜின் குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுகுழந்தை 14 அடி ஆழமுள்ள நீர்த்தேக்க தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Advertisement