தமிழகம்

உறவினர் கண்முன்னே 2 வயது குழந்தையின் மீது மோதிய தனியார் பள்ளி வாகனம்! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!

Summary:

young boy died in accident

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே தனியார் பள்ளி வேன் மோதியதில் இளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளம் பகுதியை சேர்த்த சுரேஷ் என்பவரின் 2 வயது நிரம்பிய மகேஷ் என்ற மகன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது அந்த வழியாக பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த தனியார் பள்ளி வேன், அந்த குழந்தையின் மீது மோதியதாக கூறப்படுகிறது. 

அந்த பேருந்து குழந்தை மீது மோதியதால் உறவினர்கள் மற்றும் அருகில் இருப்பவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த குழந்தையை உறவினர்கள் மீட்டு  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் விபத்தில் அடிபட்ட குழந்திங் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குழந்தையின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் பேருந்தின் டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement