திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்து இளைஞனை காதலித்த பெண்.! ஏமாற்றமடைந்த இளைஞன் எடுத்த விபரீத முடிவு.!young-boy-commit-suicide-for-cheating-girl-friend

திருவண்ணாமலை மாவட்டத்தில் ௨௫ வயது நிரம்பிய அம்ரின் பெண்ணிற்கு அஜீஸ் என்பவருடன் திருமணமாகி, இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் வலைதளத்தின் மூலம் சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியை சேர்ந்த பூபதி என்ற 21 வயது இளைஞருடன் அம்ரின் பழகி வந்துள்ளார்.

பூபதியிடம் தன்னை கல்லூரி மாணவி என்றும் தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் இணையம் வாயிலாக பேசி வந்துள்ளார் அம்ரின். இதையடுத்து , அம்ரீனை பார்க்க அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார் பூபதி. வீட்டுக்கு தெரியாமல் அவரை திருமணம் செய்து கொள்ள தாலியும் வாங்கி சென்றுள்ளார். 

young boy

பூபதி அங்கு சென்றபோது அம்ரீன் வீட்டில் இல்லை. அவரின் குழந்தைகள் மட்டும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளன. குழந்தைகளிடத்தில் நீங்கள் யார் என்று பூபதி கேட்டுள்ளார். அப்போது, அம்ரினுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும், கணவருடன் வசிப்பதும் பூபதிக்கு தெரிய வந்துள்ளது.

இதனால், ஏமாற்றமடைந்த பூபதி அம்ரின் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த அம்ரின் வீட்டுக்கு வந்த போது, பூபதி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.