தமிழகம்

பேஸ்புக் மூலம் பழகிய சிறுமி..! லாட்ஜில் ரூம் போட்ட இளைஞர்..! திண்டுக்கல்லில் நடந்த பரபரப்பு சம்பவம்.!

பேஸ்புக் மூலம் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, சிறுமியை அழைத்துச்சென்று லாட்ஜில் தங்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்தவர் 22 வயதான முகமது ஷபின். எப்போதும் பேஸ்புக்கில் ஆக்டிவாக இருக்கும் இவர் பேஸ்புக்கில் சிறுமிகளை டார்கெட் செய்து அவர்களிடம் பேசுவதும், ஆசை வார்த்தைகளை கூறி அவர்களை தன் வலையில் விழவைப்பதையும் வாடிக்கையாக செய்துவந்துள்ளார்.

இப்படிதான் மதுரையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் சமீபத்தில் அந்த இளைஞரின் வலையில் விழுந்துள்ளார். பேஸ்புக் மூலம் அந்த சிறுமியிடம் தொடர்புகொண்ட அந்த இளைஞர் அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தியதோடு அவருக்கு பாலியல் எண்ணங்களையும் உருவாக்கியுள்ளார்.

இப்படியே சில நாட்கள் சென்றநிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் சிறுமியை தன்வசப்படுத்தி மதுரைக்கு பைக்கில் சென்று அங்கிருந்து சிறுமியுடன் தப்பி வெளியூர் சென்றுள்ளார். இதனிடையே மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை அடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார் சிறுமி முகமது ஷபின் உடன் சென்றது தெரியவந்தது. இந்நிலையில் முகமது ஷபின்வின் தொலைபேசி எண்ணை வைத்து, செல்போன் டவர் சிக்னல் மூலம் அந்த இளைஞர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.

சிறுமியுடன் திண்டுக்கல்லில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த முகமது ஷபினை போலீசார் கைது செய்து சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஷபினை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ள போலீசார் அவரால் வேறு சிறுமிகள் யாரோனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement