தமிழகம்

தாறுமாறாக காரை ஓட்டிய சிறுவன்! கார் கடைக்குள் புகுந்து விபத்து!

Summary:

young boy car accident in shop

சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில், இனிப்பு கடை நடத்தி வருபவர் பெரியசாமி. இவரது கடைக்கு அருகில், உள்ள குளிர்பான கடையில் வேலை செய்து வந்த 16 வயதுடைய சிறுவன் நேற்று மாலை பக்கத்துக்கு பிரியாணி கடைக்கு சொந்தமான காரை, ஓட்டி பழகிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், பெரியசாமி கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளி, கடைக்குள் புகுந்தது. கார் வேகமாக கடைக்குள் புகுந்ததால் கடையில் உள்ள பொருட்களும் சேதமடைந்துள்ள நிலையில், பெரியசாமியின் இரண்டு கால்களிலும், எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள், கடைக்குள் புகுந்த காரை அகற்றி, கடைக்குள் காயங்களுடன் கத்திய பெரியசாமியை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் காரை ஓட்டி, விபத்து ஏற்படுத்திய சிறுவனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த நேரத்தில் விபத்து நடந்ததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், சிறுவன் காரை ஓட்டி கடைக்குள் விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement