தமிழகம் இந்தியா

கொடுமையின் உச்சம்..! 6 வயது சிறுமியை சீரழித்து கொலை செய்த கொடூரன்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

Summary:

கேரளாவின் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் அருகே சுரக்குளம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன். தோட்

கேரளாவின் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் அருகே சுரக்குளம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன். தோட்ட தொழிலாளியான இவர், கடந்த மாதம் 30ம் தேதி 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த ஜூன் 30 ல் ஒரு வீட்டில் 6 வயது சிறுமி கழுத்தில் கயிறு இறுக்கி இறந்து கிடந்தாா். அந்த சிறுமி அடிக்கடி ஊஞ்சல் கட்டி விளையாடுவதால் ஊஞ்சல் கயிறால் கழுத்து இறுகி இறந்ததாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசாா் சிறுமியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பலமுறை கற்பழிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுபற்றி மருத்துவா்கள் அறிக்கையாக போலீசாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், அர்ஜுன் 6 வயது குழந்தைக்கு மிட்டாய், பலகாரம் வாங்கி கொடுத்து வன்கொடுமை செய்து வந்ததும், சம்பவ தினத்தன்று சிறுமி மயங்கி விழவே, சிறுமியை தூக்கில் தொங்கவிட்டுள்ளார்.

அப்போது சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிய போதும், அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளார். பின்னர் சிறுமி இறந்ததை உறுதி செய்த பிறகு கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு ஜன்னல் வழியாக தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து ஒன்றும் தெரியாதது போல் சிறுமியின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் தீவிரமாக பங்கேற்று இருந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.


Advertisement