தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி..!! அதிர்ச்சி தகவல்.!!

ஆலத்தூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் தேவேந்திரன். இவருக்கு வயது 33. இவர் கூலித்தொழிலாளியாக விவசாய நிலத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அப்பகுதியில் உள்ள அய்யனார் கோவில் ஒன்றில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தேவேந்திரன் திருச்சி மத்திய சிறையில் சிறைபிடிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன் ஜாமினில் வெளிவந்த தேவேந்திரன் அவரது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.
பின்னர் ஜெயிலுக்கு சென்று வந்ததால் மன உளைச்சலில் இருந்த தேவேந்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தேவேந்திரன் மனைவி காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.