தமிழகம்

பெத்தவங்க பேச்சை கேட்காமல் தப்பு பண்ணிட்டேன்..! 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு.!

Summary:

பெத்தவங்க பேச்சை கேட்காமல் தப்பு பண்ணிட்டேன்..! 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு.!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலநாங்கூர் கன்னிக்கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவர் பாரதி என்ற இளம்பெண்ணை கடந்த 4 ஆண்டுகளுக்கு  காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒருமகனும், ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருந்துள்ளனர். 

இவர்கள், கடந்த மூன்று மாதங்களாக சீர்காழி தென்பாதி என்எஸ்பி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். கார்த்திக் சென்னை, புனே உள்ளிட்ட இடங்களுக்கு சென்று கனரக வாகனங்களை ஒற்றிவந்துள்ளார். இந்தநிலையில் பாரதி குழந்தைகளோடு தனியாக வசித்து வந்தார். கார்த்திக் அதிக அளவில் கடன் வாங்கி இருப்பதாகவும், இதனால் அவருக்கும், பாரதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. 

இதனால் கடந்த சில மாதங்களாக பாரதி கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பாரதி தனது தாய் க்கு போன் செய்து தானும், குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு போனை வைத்து விட்டார். இதனைக்கேட்டு பதறிப்போன பாரதியின் தாய் உடனடியாக தனது மகள் வசிக்கும் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. 

பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகள் பாரதி தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பேரக்குழந்தைகளை தேடிப்பார்த்தபோது வீட்டுக்குள் குழந்தைகள் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கினர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  3 பேரின் உடல்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாரதி தற்கொலைக்கு முன் ஒரு உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், எங்க சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. எங்க அப்பா, அம்மாவை விட்டு வந்து ரொம்ப தப்பு பண்ணிட்டேன். என் புருஷனுக்கு கடன் வாங்கி, கடன் கொடுக்கத்தான் தெரியும். எங்களுக்கு இடம் வாங்கி வீடு கட்ட தெரியாது. எங்க எதிர்காலம் எப்படி இருக்கும் என தெரியல. அதனால எதையும் சந்திக்கும் தைரியம் இல்லை என எழுதியுள்ளார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


Advertisement