உன்னைப்பற்றி மாப்பிள்ளையிடம் தவறாக சொல்லவா? திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மிரட்டிய தம்பதி.! அடுத்த நொடியே உயிரைவிட்ட பகீர் சம்பவம்.!

உன்னைப்பற்றி மாப்பிள்ளையிடம் தவறாக சொல்லவா? திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மிரட்டிய தம்பதி.! அடுத்த நொடியே உயிரைவிட்ட பகீர் சம்பவம்.!


women-suicide-in-mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடவாசல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தீபா. 26 வயது நிரம்பிய பட்டதாரி பெண் தீபாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.  இந்தநிலையில் தீபா, தண்ணீர் பிடிப்பதற்கு வீட்டின் அருகே உள்ள குடிநீர் குழாய்க்கு சென்றுள்ளார்.

அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகிய இரண்டு பேரிடம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாமா, பிரபுதாஸ் ஆகிய இருவரும் உன்னைப்பற்றி திருமணம் நிச்சயித்த மாப்பிள்ளையிடம் தவறாக கூறி விடுவோம், உன்னை பற்றி தவறாக மாப்பிள்ளைக்கு தெரிந்தால் என்ன ஆகும் என நினைத்து பார் என தீபாவை மிரட்டியதாக கூறப்படுகிறது.

suicide

இதனால் மனமுடைந்த தீபா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக பாமா மற்றும் பிரபுதாஸ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.