தமிழகம்

ரயிலில் கழிவறைக்கு சென்ற பெண்ணுக்கு இப்படியொரு துயரமா? அலறித்துடித்த பெண்ணால்,பதறிப்போன பயணிகள்.!

Summary:

women struggled by western toilet in train

முன்பெல்லாம் அனைத்து இடங்களிலும்  இந்தியன் டாய்லெட் முறையே பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் தற்பொழுது  பல இடங்களில் வெஸ்ர்டன் கழிவறையே  அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் பலருக்கு இந்த வெஸ்டன் டாய்லெட்டை எவ்வாறு பயன்படுத்துவது என தெரியால் பல இடங்களில் அவதிப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சார்மினார் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலில் பயணம் செய்ய  பாரதம்மா என்ற பெண் ஏறியுள்ளார். 

பின்னர் ரயில் புறப்படுவதற்கு முன்பாக கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு வெஸ்ர்டன் கழிப்பறை இருந்துள்ளது. அதனை பயன்படுத்த தெரியாத பாரதம்மா, என்ன செய்வதென்று 
தெரியாமல் அங்கிருந்த இரும்பு தகடுக்குள் காலை விட்டுவிட்டார். 

பின்னர் அவரால் காலை வெளியே எடுக்க முடியவில்லை.இதனால் பயந்துபோன அவர் கூச்சலிட்டு சத்தமாக கத்தியுள்ளார். இதனை கேட்டு ஓடிவந்த சக பயணிகள் கதவை திறந்து பார்த்தபோது, கழிவறைக்குள் பாரதம்மாவின் கால் சிக்கியபடி, அழுதுகொண்டிருந்தார். 

இதனையடுத்து சென்ட்ரல் ரயில்நிலைய பணியாளர்கள், மற்றும் மருத்துவர்கள்  சார்மினார் எக்ஸ்பிரசுக்கு விரைந்தனர். பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கழிவறையில் சிக்கிய பாரதம்மாவின் காலை  வெளியே எடுத்தனர். அங்கு நடந்த பரபரப்பில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதற்கு சிறிது கால தாமதம் ஏற்பட்டது. 


 


Advertisement