மருத்துவமனையில் பொது இடத்தில் 40 வயது பெண்ணிடம் இளைஞன் செய்த மோசமான செயல்! செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் மருத்துவம்

மருத்துவமனையில் பொது இடத்தில் 40 வயது பெண்ணிடம் இளைஞன் செய்த மோசமான செயல்! செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்!

வேலூர் மாவட்டத்தில் அடுக்கம்பாறை என்கிற கிராமத்தில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுடன் வரும் அவர்களது உறவினர்கள் தங்குவதற்காக மருத்துவமனை வளாகத்தில் ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது. 

வேலூரை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க பெண்மணி ஒருவர் நோயாளியாக உள்ள தனது உறவினர் ஒருவரை பார்க்க வந்துள்ளார். அவர் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருக்கும் வளாகத்தில் அமர்ந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் வெகு நேரமாக இளைஞர் ஒருவர் இந்த 45 வயது பெண்ணையே நோட்டமிட்டுள்ளார். 

அதன் பின் அந்த பெண்ணிடம் அந்த இளைஞர் தவறாக நடக்க முயன்றுள்ளான். அப்போது, திடீரென அந்த பெண்மணி அந்த இளைஞரின் சட்டையை பிடித்து, கடும் கோபத்துடன் திட்டி தனது காலில் இருந்து செருப்பை கழட்டி அந்த இளைஞனை கன்னாபின்னமாக அடித்துள்ளார். இதனை மருத்துவமனைக்கு வந்த நூற்றுக்கணக்கான மக்கள் நின்று வேடிக்கை பார்த்தனர். 

அதன் பின் உடனடியாக அங்கிருந்த காவலரிடம், இவன் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி, ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, பொலிசார் அவரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த இளைஞர் பெயர் பரசுராமன் என்பதும் கண்ணமங்கலம் அடுத்த கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo