தமிழகம் இந்தியா

பெண் பயணிக்கு பாலியல் தொல்லை.. பிரபல நிறுவனத்தின் வியாபார பிரதிநிதி கைது..!

Summary:

பெண் பயணிக்கு பாலியல் தொல்லை.. பிரபல நிறுவனத்தின் வியாபார பிரதிநிதி கைது..!

விமானத்தில் பயணம் செய்த பெண் பயணியை, அருகிலிருந்தவர் ஆபாசமாக தொட்டு சீண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில், ஒரு இளம்பெண் பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு அருகாமையில் அமர்ந்திருந்த சென்னையை சேர்ந்த வியாபார பிரதிநிதியாக பணியாற்றி வரும் 30 வயதான கிருஷ்ணன், அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

விமானம் நடுவானில் பறந்த போது, அந்த பெண்ணை ஆபாசமாக சீண்டியும், கண்ட இடத்தில் தொட்டும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதற்கு அந்த பெண் எதிர்ப்புவித்து கண்டித்துள்ளார். இருப்பினும் கிருஷ்ணன் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பெண் பயணி, விமான பணிப்பெண்ணிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் பயணிக்கு வேறு ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டு அவர் அங்கு சென்றார்.

தொடர்ந்து விமானம் பெங்களூருவில் இறங்கிய பின், இந்த சம்பவம் தொடர்பாக பெண் விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Advertisement