வீட்டு மாடியில் காய்ந்த துணிகளை எடுக்கச் சென்ற பெண்.! நொடிப்பொழுதில் போன உயிர்.! சோக சம்பவம்.!

வீட்டு மாடியில் காய்ந்த துணிகளை எடுக்கச் சென்ற பெண்.! நொடிப்பொழுதில் போன உயிர்.! சோக சம்பவம்.!


women died in upstairs

திருவள்ளுவர் மாவட்டம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மனைவி ராணி. இவர் நேற்று இரவு அவரது வீட்டின் மாடியில் காய்ந்த துணிகளை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது காய்ந்த துணிகளை எடுத்தபோது தூணில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் துணி மாட்டிக்கொண்டது.

அப்போது அவர் துணியை வேகமாக இழுத்தபோது தூண் சரிந்து ராணி மீது விழுந்தது. இதில் ராணி பலத்த காயமடைந்துள்ளார். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்துவந்து ராணியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில், ராணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.