தமிழகம்

20 வருடங்களாக குழந்தை இல்லை..! 20 வருடம் கழித்து பிறந்த இரட்டை குழந்தைகள்..! ஆனாலும் நிம்மதி இழந்த பெற்றோர்.! ஏன் தெரியுமா.?

Summary:

Women deliver twin babies after 20 years

திருமணம் முடிந்து 20 வருடங்களாக குழந்தை இல்லமால் தவித்த தம்பதியினர் தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளநிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்துவரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சின்ன பொன் பூண்டி  சேர்ந்தவர் 55 வயதாகும் ஹரிராமன், இவரது மனைவி தமிழரசி. இவர்கள் இருவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் முடிந்தநிலையில் பலவருடங்களாக குழந்தை இல்லை.

ஏழை விவசாயினான ஹரிராமன் பல்வேறு சிகிச்சை மேற்கொண்டும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் சென்னையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழரசி கருவுற்றநிலையில் சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள தனியார் மருத்துவனை மூலம் அறுவை சிகிச்சை செய்து சமீபத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

குழந்தைகள் பிறந்த நிலையில் தற்போது ஊரடங்கு என்பதால் ஹரிராமனால் தனது குடும்பத்தை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பமுடியவில்லை. வீட்டு வாடகை, உணவு, மற்றும் குழந்தை செலவு ஆகியவற்றிக்கும் பணமில்லாமல் சென்னையில் தவித்து வரும் நிலையில் சொந்த ஊருக்கு செல்ல  அரசின் இ பாஸ் சேவையினை கேட்டு இதுவரை 6 முறை இ பாஸ் விண்ணப்பித்துள்ளார் ஹரிராமன்.

ஆனால் 6 முறையும் விண்ணப்பம நிராகரிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல், சென்னையில் தங்கி தனது மனைவி மற்றும் குழந்தைகளை பராமரிக்கவும் பணம் இல்லாமல் சிரமப்பட்டுவரும் இவருக்கு அரசு உதவவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துவருகின்றனர்.


Advertisement