தமிழகம்

தம்பி!! இப்படி பண்ணிட்டியேடா!! காதணி விழாவுக்கு முறைப்படி அழைக்காத விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை..

Summary:

காதணி விழாவிற்கு தம்பி முறைப்படி அழைக்காததால் அக்கா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவ

காதணி விழாவிற்கு தம்பி முறைப்படி அழைக்காததால் அக்கா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜெயலட்சுமி (52). ஜெயலட்சுமியின் தம்பி குழந்தைகளுக்கு சமீபத்தில் காதுகுத்து நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு ஜெயலட்சுமியின் தம்பி, பத்திரிகை ஒன்றை ஜெயலட்சுமிக்கு தபாலில் அனுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த பத்திரிகையில் ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் பெயர் போடவில்லை என தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஜெயலட்சுமி, பத்திரிகையை தனது தம்பி நேரில் வந்து வைக்கவில்லை எனவும், தனது குடும்பத்தினரின் பெயரை போடவில்லை எனவும் கூறி வேதனை அடைந்துள்ளார்.

இந்நிலையில் மனவேதனை அடைந்த ஜெயலட்சுமி, தனது வீட்டின் பின்புறம் உள்ள முந்திரி தோப்புக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். முறைப்படி பத்திரிகை வைத்து அளிக்காததால் பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement