தமிழகம்

அம்மணி பார்க்கத்தான் ஆள் டீசண்டு.. ஆனால் செஞ்ச காரியம் இருக்கே..! பதறிப்போய் நிற்கும் குடும்பம்..

Summary:

ஓய்வு பெற்ற கண்டக்டரிடம் ரூ.45 லட்சம், மற்றும் 60 சவரன் நகைகளை பறித்து நம்பிக்கை மோசடி செய

ஓய்வு பெற்ற கண்டக்டரிடம் ரூ.45 லட்சம், மற்றும் 60 சவரன் நகைகளை பறித்து நம்பிக்கை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் அருகேயுள்ள பால்பண்ணை பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார் ஓய்வு பெற்ற நடத்துனரான சுப்ரமணியன். இவர் தற்போது தனது வீட்டிற்கு அருகே இருக்கும் விநாயகர் கோவில் ஒன்றை பராமரித்து வருகிறார். இந்நிலையில் அந்த கோவிலுக்கு வரும் ஆண்டோ சிட்டி பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் அவரின் மகள் ராஜேஷ்வரி உடன் சுப்ரமணியத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ராஜேஸ்வரி  சுப்ரமணியம் மூலம் அவரது குடும்பத்தினருடனும் நெருங்கி பழகிவந்துள்ளார். இந்த பழக்கம் மூலம் சுப்ரமணியத்திடம் பி.எப் பணம் மற்றும் ஓய்வூதிய பணப் பலன்கள், நகைகள் இருப்பதை ராஜேஸ்வரி தெரிந்துகொண்டார். எப்படியாவது அவற்றை பறித்துவிட வேண்டும் என திட்டம் போட்ட அவர், அதற்காக தனது குடும்பத்தினருடன் சேர்ந்து திட்டம் ஒன்றையும் தீட்டியுள்ளார்.

அதன்படி, தன்னுடைய பூர்வீக சொத்தை பல கோடி ரூபாய்க்கு விற்று இருப்பதாகவும், அவை தொடர்பான ஆவணங்கள் சில வருமான வரித்துறை வசமிருப்பதாகவும், அந்த ஆவணங்களை மீட்டக வருமானவரித்துறைக்கு 45 லட்சம் ரூபாய் பணம் செலுத்தவேண்டி இருப்பதாகவும் ராஜேஸ்வரி சுப்ரமணியத்திடம் கூறியுள்ளார்.

சுப்பிரமணியமும் நட்பின் அடிப்படையில் ராஜேஸ்வரிக்கு உதவ முன்வந்து 45 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை ராஜேஸ்வரியிடம் கொடுத்துள்ளார். சிறிது நாட்கள் கழித்து தனக்கு மேலும் 20 லட்சம் தேவை படுவதாக ராஜேஸ்வரி சுப்ரமணியத்திடம் கூறியுள்ளார்.

மேலும் அவர் நம்ப வேண்டும் என்பதற்காக ராஜேஸ்வதி தனது குடும்பத்தினரான ராகுல் உள்ளிட்ட 7 பேரை சுப்ரமணியத்தின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். வருமான வரித்துறை சீல், அதிகாரிகள் கையெழுத்து எனப் போலியான ஆவணங்களைக் காட்டி ஏமாற்றி சுப்ரமணியத்திடம் இருந்து 60 பவுன் நகைகளையும் ராஜேஷ்வரி வாங்கியுள்ளார்.

இந்நிலையில் பணம், நகைகள் வாங்கி பல மாதங்கள் ஆகியும் ராஜேஸ்வரிடம் இருந்து எதுவும் திரும்பி வரவில்லை. அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி இது தொடர்பாக நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி ஓம் பிரகாஷ் மீனாவை சந்தித்து புகார் அளித்தார்.

புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நம்பிக்கை மோசடி செய்த கும்பலை தேடிவந்தநிலையில், இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட ராஜேஸ்வரி தஞ்சாவூரில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அவரை நள்ளிரவில் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement