அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
கள்ளகாதலியுடன் ஜல்சா.. வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய பயங்கரம்... கள்ளக்காதல் கேடுத்தரும்.!
கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வைத்து, அவரை மிரட்டி பணம் பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகாமையில் வல்லம் பகுதியில் வசித்து வருபவர் முஹம்மது அலி. இவரது மகன் முபாரக் (வயது 25). இந்த நிலையில், முகமது அலி புருனே நாட்டில் பள்ளிக்கூடம் ஒன்று நடத்திவரும் நிலையில், அந்த பள்ளியில் கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் வசித்து வந்த வசந்தன் என்பவரின் மனைவி சாந்தா பணியாற்றி வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து புருனேவில் இருந்தபோது, சாந்தாவிற்கும், முபாரக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அப்போது இருவரும் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து முபாரக், அதனை காட்டி மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.
மேலும், தனது நண்பன் தேவாரம் நகரைச் சேர்ந்த தினேஷ் மற்றும் மின்நகரை சேர்ந்த தினேஷ் ஆகியோரின் வங்கி கணக்கில் பணத்தை போட சொல்லி மிரட்டிய நிலையில், ரூ.40000 பணத்தை முபாரக்கின் நண்பர்கள் வங்கி கணக்கில் சாந்தா செலுத்தியுள்ளார்.

இதோடு நிறுத்திக் கொள்ளாமல் மீண்டும் முபாரக் நாம் நெருக்கமாக இருக்கும் வீடியோவை உன் கணவருக்கு அனுப்பி விடுவேன் அல்லது சமூகவலைதளத்தில் பரப்பி விடுவேன் என்று மிரட்டிய நிலையில், சாந்தா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
அத்துடன் இதனை இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது என எண்ணிய சாந்தா இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பு மோகன் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முபாரக் மற்றும் அவரது தினேஷ் என்ற இரு நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.