சரக்கு தரமறுத்த இளம் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள்! டெல்லியில் பரபரப்பு! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் இந்தியா

சரக்கு தரமறுத்த இளம் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள்! டெல்லியில் பரபரப்பு!

பீர் தர மறுத்த டெல்லியை சேர்ந்த பெண்ணை மூன்று இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 7 ஆம் தேதி மூன்று பேர் கொண்ட கும்பல் ஓன்று குடிப்பதற்கு பீர் கேட்டு பெண் ஒருவரை தொல்லை செய்துள்ளனர். குறிப்பிட்ட அந்த பெண் ஒரு வருடத்திற்கு முன்பு போலியான முறையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாகவும், தற்போது அந்த தொழிலை விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுசமந்தமாக விகாஷ் மிஸ்ரா(24), பங்கஜ் (23), முன்டூ (22) என்ற மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். குறிப்பிட்ட இந்த மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணிடம் சாராயம் கேட்டு தொல்லை செய்துள்ளனர்.

அந்த பெண் தன்னிடம் சாராயம் இல்லை என்று கூறியும் இவர்கள் நம்பவில்லை. அவர் தங்களிடம் பொய் கூறுவதாக நினைத்த இளைஞர்கள் மறைத்துவைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அங்கம்பாக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மிக மோசமான நிலையில் அந்த பெண்ணிற்கு தற்போது சிகிச்சை நடைபெற்றுவருகிறது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo