தமிழகம்

திருமணமான 6 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் வழக்கறிஞர்!

Summary:

Woman advocate suicide after 6 months of marriage


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கூத்தணி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். அவருடைய மகள் வினோதினி சட்டம் படித்து வழக்கறிஞர் ஆகியுள்ளார்.
இந்தநிலையில் வினோதினிக்கும் பக்கத்துக்கு ஊரான காரைக்குளம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் வினோதினி நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த வினோதினியின் தந்தை பன்னீர்செல்வம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வினோதினி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் வினோதினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement