தமிழகம்

கோவிலுக்கு சென்ற கணவர்! தீர்த்து கட்ட மனைவி போட்ட பலே திட்டம்! சினிமாவையும் மிஞ்சிய அதிர்ச்சி பின்னணி!

Summary:

wife try to kill husband

சென்னை அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு  ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்தார்.  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 இந்நிலையில் போலீசார் அவரிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர் நான் முருகன் கோவிலுக்கு செல்வதற்காக ஆவடி ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் ஏறினேன். அப்போது ரயில் அரக்கோணம் மற்றும் திருத்தணி பகுதிக்கு இடையே சென்றபோது, மூன்று நபர்கள் என்னை கீழே தள்ளி விட்டனர். மேலும் இந்த கொலை முயற்சிக்கு எனது மனைவி அஸ்வினிதான்  காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.

 இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ராஜேந்திரன் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  அப்பொழுது அஸ்வினிக்கும்,  அவரது நண்பர் அனுராக் என்பவருடன் தகாத உறவு இருந்துள்ளது. அதனை அறிந்த  ராஜேந்திரன் அவரை கண்டித்துள்ளார். 

இந்நிலையில் அஸ்வினி அனுராக், கமலேஸ்வரன், தினேஷ் ஆகியோரின் உதவியுடன் ராஜேந்திரனை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement