நீச்சல் தெரியும் என்பதால் இறுக்கமாக கல்லைக் கட்டிக்கொண்டு மகன்களுடன் கிணற்றில் குதித்த தாய்.! அதிர்ச்சி காரணம்.!

நீச்சல் தெரியும் என்பதால் இறுக்கமாக கல்லைக் கட்டிக்கொண்டு மகன்களுடன் கிணற்றில் குதித்த தாய்.! அதிர்ச்சி காரணம்.!


wife suicide with two sons

சேலம் மாவட்டம் கணவாய் புதூர் ஊராட்சி கே.மோரூர் லேண்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் அதே பகுதியில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு 10 வருடத்திற்கு முன்பு மரகதம் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒருமகனும், 5 வயதில் ஒரு மகனும் இருந்தனர்.

இந்த நிலையில் பிரபாகரனுக்கும், அவரது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அப்பெண்ணை கடந்த 2 மாதத்துக்கு முன்பு வேலையில் இருந்து நிறுத்தியுள்ளனர்.

ஆனாலும் பிரபாகரனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக அவரது மனைவி மரகதம் சந்தேகப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில், நேற்று காலை வழக்கம்போல் பிரபாகரன் தனது நிறுவனத்துக்கு சென்றுள்ளார். அப்போது மனவேதனை அடைந்த மரகதம் அவர்களது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றிற்கு சென்று உடலில் கல்லை கட்டிக்கொண்டு 2 மகன்களை அணைத்துக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று காலை வழக்கம்போல் பிரபாகரன் தனது நிறுவனத்தில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தனது மனைவி மற்றும் மகன்களை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர்களது விவசாய கிணற்றில் மரகதத்தின் செருப்பு மிதந்துள்ளதை பார்த்தார். இஇதனையடுத்து போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவலறிந்து சமத்துவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், கிணற்றுக்குள் இருந்து 3 போரையும் பிணமாக மீட்கப்பட்டனர். மரகதத்துக்கு நீச்சல் தெரியும் என்பதால் உடலில் கல்லை கட்டிக்கொண்டு 2 மகன்களை அணைத்துக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக பிரபாகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.