தமிழகம்

ஆசைப்பட்டு திருமணம் செய்த மனைவி அழகாக இல்லை என கணவன் செய்த செயல்! புதுப்பெண் எடுத்த முடிவு!

Summary:

wife suicide for husband torture

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த அர்ச்சனா என்ற இளம்பெண் தந்தையை இழந்தநிலையில், அதே பகுதியை சோ்ந்த சிவா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு  திருமணமாகி 7 மாதங்கள் ஆன நிலையில் அர்ச்சனா நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தநிலையில் அர்ச்சனாவின் மூத்த சகோதரி கூறுகையில், எங்கள் வீட்டில் மூன்று பெண் குழந்தைகளில் மூன்றாவது தான் அர்ச்சனா. எங்கள் வீட்டில், தாய் இல்லாத குறையை போக்க அவர்களுக்கு நான் தாயாகவும் தந்தையாகவும் இருந்து மூன்று பேரையும் வளா்த்தேன். அர்ச்சனாவை விருப்பப்பட்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் தான் சிவா திருமணம் செய்தார்.

ஆனால் திருமணத்திற்கு பிறகு கணவனுக்கும் மாமியாருக்கும் தன்னை பிடிக்கவில்லையென்றும் நான் அழகு இல்லாமல் இருக்கிறேன் என கூறி என்னிடம் தினமும் கணவா் சண்டை போடுவதாக என்னிடம் அடிக்கடி அர்ச்சனா கூறியுள்ளார் என தெரிவித்தார்.

 இவ்வாறு அடிக்கடி சட்டைபோட்டுவந்ததால் மிகவும் மனா வேதனையுடன் இருந்துள்ளார் அர்ச்சனா. இந்தநிலையில் தான் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது கொலையாக கூட செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும்  எழுகிறது என கூறியுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement