தமிழகம்

கணவர் மீது தீராது அன்பு கொண்ட காதல் மனைவி.! குழந்தை இல்லாத காரணத்தினால் நடந்த துயரம்.! பரிதாபமாக போன இரண்டு உயிர்.!

Summary:

கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை

கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஜெய்ஹிந்த் நகரை சேர்ந்த செல்வகுமார் என்ற நபரும், அதே பகுதியை சேர்ந்த நித்யா என்ற இளம்பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில், இருவரும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் செல்வகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத நித்யா கடும் அதிர்ச்சியில் உடைந்து போனார். செல்வகுமார் தற்கொலை குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், கணவர் இறந்த துக்கத்தில் இருந்த நித்யா நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதைக் கண்ட உறவினர்கள் நித்யாவின் உடலைப் பார்த்து கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்து நித்யாவின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருவரின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Advertisement