தமிழகம்

மகள் மீது ஆசைப்பட்ட கணவன்! மனைவி மறுத்ததால் நேர்ந்த கொடூரம்! கள்ளகாதலால் நேர்ந்த சோகம்!

Summary:

மகள் மீது ஆசைப்பட்ட கணவன்! மனைவி மறுத்ததால் நேர்ந்த கொடூரம்! கள்ளகாதலால் நேர்ந்த சோகம்!


 வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே பெரியகிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் மேல்புதுப்பேட்டையை சேர்ந்த கல்பனாவிற்கும், திருமணமாகி 18 வயதில் மஞ்சு மற்றும் 10 வயதில் சுப்புலட்சுமி என்ற இரு மகள்கள் உள்ளனர். 

இந்நிலையில் கல்பனாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த காவலர் குமரேசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. 

இதை அறிந்த ரமேஷ், வேதனையில் கல்பனாவை விட்டு சென்றுவிட்டார். இதையடுத்து குமரேசனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட கல்பனா தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.

 கல்பனாவும் மூத்த மகள் மஞ்சுவும் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். குமரேசன் சென்னையில் பணியாற்றி வருவதால் வாரத்தில் ஒரு முறை வாலாஜாப்பேட்டைக்கு வந்து கல்பனாவை சந்தித்து விட்டு சென்றுள்ளார்.  

குமரேசனுக்கு கல்பனாவின் மூத்த மகள் மஞ்சு மீது ஆசை இருந்துள்ளது. இந்த ஆசையை கல்பனாவிடம் சொன்னபோது மகள் உறவு கொண்ட பெண்ணை எப்படி திருமணம் செய்து வைப்பது என கேட்டு மறுத்துள்ளார்.

குமரேசனின் ஆசைக்கு மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கிடையே சண்டை ஏற்பட்டு, கல்பனாவை தாக்கியுள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த கல்பனா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். சம்பவத்தன்று மஞ்சு வேலைக்கு சென்று விட்டு திரும்பிய போது கல்பனா தூக்கில் தொங்கிய நிலையில் மயக்கத்தில் இருந்தார்.

இதனையடுத்து  மருத்துவமனைக்கு கல்பனா கொண்டு செல்லப்பட்டார்.  செல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டார். தனது தாய் மரணத்தில் மர்மம் இருக்கின்றது என மஞ்சு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் குமரேசன் போலீஸ் என்பதால் அவருக்கு எதிரான அந்த புகாரை யாரும் ஏற்கவில்லை. மேலும் அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.


Advertisement