தமிழகம்

கணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு.! ஆதாரத்துடன் கண்டுபிடித்த மனைவி.! இறுதியில் நேர்ந்த பரிதாபம்.!

Summary:

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த அன்பரசன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சித்ரா என்ற பெண்ணை க

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த அன்பரசன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு  2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள உஞ்சப்பாளையம் பகுதியில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். 

கோவையில் தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்த அன்பரசன் போனில் பல பெண்களுடன் பேசி வந்துள்ளார். சித்ராவின் கணவர் அன்பரசன் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதற்கான ஆதாரங்கள் சித்ராவிற்கு கிடைத்துள்ளது. இதனால், இது குறித்து சித்ரா அவரிடம் கேட்ட போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் தனது இரு குழந்தைகளையும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் கோவிலுக்கு அனுப்பி விட்டு கடந்த வியாக்கிழமை மாலை சித்ரா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவன் அன்பரசன், அவரது மனைவி சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, சித்ராவின் பெற்றோர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த தம்பதிக்கு திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே வரதட்சணை கேட்டு சித்ராவை அன்பரசன் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement