கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
12 மணி நேரம் இறந்த கணவரின் சடலத்துடன் இருந்த மனைவி! சோக சம்பவம்!

சென்னை மயிலாப்பூர் ரோசாரி சர்ச் சாலையில் ஓரமாக வசித்து வந்தவர் தங்கப்பன். அவரது மனைவி ஜெயந்தி. இவர்களில் தங்கப்பனுக்கு நடக்க முடியாது. ஜெயந்திக்கு பார்வை தெரியாது. இந்நிலையில் அவர்களுக்கு அக்கம்பக்கத்தினர், தன்னார்வலர்கள் உணவு கொடுத்து உதவி செய்து வந்துள்ளனர்.
மேலும் அவர்கள் தள்ளுவண்டியை வீடாக மாற்றி வசித்து வந்தநிலையில் நேற்று முதியவர் தங்கப்பனின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பார்க்கமுடியாது என கூறப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டார்.அதனை தொடர்ந்து வெகுநேரமாக தங்கப்பன் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதை உணர்ந்த ஜெயந்தி, அவர் இறந்துவிட்டதை உணர்ந்து, என்ன செய்வதென தெரியாமல் அழுதுகொண்டே அமர்ந்துள்ளார்.
இந்நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறை மற்றும் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் யாரும் வராதநிலையில் தன்னார்வலர்கள் கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து போலிசார் முதியவரின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மூதாட்டி ஜெயந்தியை ஆதரவற்றோர் முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.