தமிழகம்

அமெரிக்காவில் இருந்து மனைவி, குழந்தைகளை ஆசையுடன் பார்க்க வந்த கணவன்! வீட்டிற்குள் அனுமதிக்காத மனைவி!

Summary:

wife not allowed america returned husband

மதுரையை சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கும் கேரள மாநிலம் வெள்ளி மலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்று அந்த தம்பதிக்கு குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில், பாஸ்கரன் குடும்பத்தினரை கேரளாவில் விட்டு விட்டு, அமெரிக்காவிற்கு வேலைக்காக சென்றுவிட்டார்.

அவர் அங்கிருந்து பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு தனது வீடு அமைந்துள்ள கேரள மாநிலம் வெள்ளிமலைக்கு சென்றுள்ளார். மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வீட்டின் கதவை திறக்க கூறியுள்ளார் பாஸ்கரன். ஆனால் பாஸ்கரனுக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தால், அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமலும், கதவை திறக்காமலும் இருந்துள்ளனர்.

அவர் மனைவியின் பெயரை அழைத்து என்னை உள்ளே விடு என்று நீண்ட நேரம் கெஞ்சியுள்ளார். அதன் பின் சிலர் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும், மனைவி கணவனை வீட்டின் உள்ளே விடாததால், விரக்தியடைந்த பாஸ்கரன், கார் மூலம் மதுரைக்கு சென்றுள்ளார்.


Advertisement