தமிழகம்

குடிபோதையில் கதறவிட்ட கணவன்.! வலி தாங்க முடியாமல் துடிதுடித்த மனைவி.! இறுதியில் பரிபோன உயிர்.!

Summary:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். 35 வயது

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். 35 வயது நிரம்பிய இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு பொன்னாரம்பட்டி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான இளமதி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி இவர்களது திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் கொரோனா காரணமாக வேலைக்கு செல்லாமல் குடிபழக்கத்திற்கு அடிமையாகி தினமும்  மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் அவரது மனைவி இளமதியிடம் தகராறில் ஈடுபட்டு, இளமதியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகின்றது.

ஒருகட்டத்தில் வலி தாங்க முடியாமல் துடித்த இளமதி, அருகில் கிடந்த உருட்டு கட்டையால் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில், மணிகண்டனின் உறவினர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதுதொடர்பாக இளமதியை கைதுசெய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement