தமிழகம்

கணவரின் அண்ணனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்!. இருவரும் பேருந்தில் குழந்தையை உடன் வைத்துக்கொண்டு செய்த கொடூர செயல்!.

Summary:

wife love affairs with husband brother

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று கிளம்பிய நிலையில் அதில் ஒரு ஆணும், பெண்ணும் மயங்கி விழுந்தனர். அவர்களிடம் குழந்தை ஒன்று இருந்துள்ளது .

இதையடுத்து ஓட்டுனர் பேருந்தை மருத்துவமனைக்கு ஓட்டி சென்ற நிலையில் அங்கு இருவரையும் மருத்துவர்கள் பரிசோதித்ததில் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

மேலும் பரிசோதனையில் அவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்த 2 பேரும் கள்ளக்காதல் ஜோடி என்பதும், இறந்தவர்களின் பெயர் மணிகண்டன் மற்றும் இலக்கியா என்பது தெரியவந்துள்ளது.

மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ஆனால் மணிகண்டனினின் சகோதரன் நயினார் என்பவரின் மனைவி தான் இலக்கியா.

இந்த நிலையில், இலக்கியாவுக்கு கணவர் நயினாரின் அண்ணன் மணிகண்டனுடன் கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து இருவரும் ஓடிப்போய் குடித்தனம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து இலக்கியா தனது குழந்தையுடன் மணிகண்டனுடன் சென்றுள்ளார்.இதனை அறிந்த நயினார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீசார் தங்களை எப்படியும் பிடித்து விடுவார்கள் என்று கருதிய இருவரும் பயத்தின் காரணமாக பேருந்தில் செல்லும் போது விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
 


Advertisement