தமிழகம்

குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி நடந்த காதல் திருமணம்.. 3 வது நாளே நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!

Summary:

wife-left-husband-three-days-after-love-marriage-coimbatore

கோவை பேரூரை அடுத்துள்ள சென்னனூரை சேர்ந்த வெல்டிங் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் கோவிந்தராஜ். இவர் மஞ்சுளா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி அன்று பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளனர். 

திருமணமாகி 3 நாட்களே ஆன நிலையில் மஞ்சுளாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் கோவிந்தராஜ் மற்றும் மஞ்சுளாவை அழைத்து பேசியுள்ளனர். 

அப்போது மஞ்சுளா, கோவிந்தராஜ் உடன் வாழ விரும்பவில்லை. தனது பெற்றோருடனே சென்று விடுவதாக கடிதம் எழுதி கொடுத்து விட்டு பெற்றோருடன் சென்றுள்ளார். மஞ்சுளாவின் இந்த திடீர் முடிவால் கோவிந்தராஜீக்கு மிகுந்த வேதனையை தந்துள்ளது. 

இதனையடுத்து மஞ்சுளாவின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோவிந்தராஜின் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement