போதையில் கணவன் சொன்ன அந்த வார்த்தை! அடித்தே கொன்ற மனைவி! அதிர்ச்சி சம்பவம்!

போதையில் கணவன் சொன்ன அந்த வார்த்தை! அடித்தே கொன்ற மனைவி! அதிர்ச்சி சம்பவம்!


wife killed his husband


சிவகாசியை அடுத்த மடத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ், உணவகத்தில் மாஸ்டராக வேலை பார்த்து வரும் இவர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தை பார்த்துவிட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

முத்துராஜ் விடுமுறையில் வரும் போது வீட்டிற்கு குடித்துவிட்டு போதையில் தள்ளாடியபடி வருவாராம், வந்தவுடன் தகாத வார்த்தைகளை கூறி அவரது மனைவி தனலட்சுமியுடன் கடுமையாக சண்டை போடுவார் என கூறப்படுகிறது.

Husband

இதேபோல் கடந்த 22ம் தேதி வீட்டில் சண்டை ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து மறுநாள் காலை பிணமாக கிடந்துள்ளார். முத்துராஜ்  அவரது மார்பு, முதுகுப்பகுதிகளில் பலத்த அடியுடன், வலது காதும் கிழிந்து தொங்கியுள்ளது, பலத்த அடி பட்டதால் முத்துராஜ் இறந்து போயிருக்கலாம் என அனைவரும் சந்தேகம் அடைந்தனர்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோப்ப நாயின் உதவியுடன் சோதனையிட்டதில் தனலட்சுமி சிக்கியுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில், அன்றைய தினம் குடித்துவிட்டு வந்து சண்டையிட்டார், அப்போது என் தம்பியுடன் என்னை சேர்த்து தவறாக, கேவலமாக பேசியதால் ஆத்திரத்தில் நானும், என் தம்பியுடன் கம்பியால் அடித்ததில் இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தனலட்சுமியையும், அவரது தம்பியையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.