லாக்டவுனில் உருவான கள்ளக்காதல்.! கணவன் இல்லாத நேரத்தில் உல்லாசம்.! கண்டித்த கணவனுக்கு நேர்ந்த கதி.!
லாக்டவுனில் உருவான கள்ளக்காதல்.! கணவன் இல்லாத நேரத்தில் உல்லாசம்.! கண்டித்த கணவனுக்கு நேர்ந்த கதி.!

கள்ளக்காதல் விவகாரத்தில், மனைவியால் கொல்லப்பட்ட கணவனின் சடலத்தை ஒரு மாதத்துக்கு பிறகு தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டம் சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். 53 வயது நிரம்பிய இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு சோபனா என்ற 30 வயது நிரம்பிய மனைவியும், இந்த தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
தற்போது கொரோனா லக்கடவுன் காலம் என்பதால் சிவபுரத்தில் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு அவர் மட்டும் சென்னையில் இருந்துள்ளார். அவ்வப்போது விடுமுறை கிடைக்கும் போது சென்னையில் இருந்து வந்து மனைவி, குழந்தைகளை பார்த்து வந்துள்ளார் அன்பழகன்.
இந்தநிலையில், கடந்த மாதம் 24-ந்தேதி முதல் அன்பழகனை காணவில்லை என அவரது மனைவி சோபனா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து சோபனா தலைமறைவானார். இதனையடுத்து போலீசார் சோபனாவை தேடி கண்டு பிடித்து விசாரித்தபோது சோபனா முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்து சோபனாவிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் தர்மராஜூவுக்கும் ஷோபனாவுக்கும் தொடர்பு ஏற்பட்டதும். இது அன்பழகனுக்கு தெரியவந்து மனைவியை கண்டித்து தர்மராஜுவை வீட்டுக்கு வரக்கூடாது என்று அன்பழகன் கூறியுள்ளார்.
இதனால் தர்மராஜும் ஷோபனாவும் அன்பழகனை கொலை செய்து ஆற்றங்கரையோரம் குழி தோண்டி புதைத்து விட்டு மாயமானதாக நாடகமாடியது தெரிய வந்தது. இதனையடுத்து அன்பழகனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேகொண்டனர். சோபனா, தர்மராஜ், மற்றும் அவரது நண்பர் விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.