கணவன் இருக்கும்பொழுதே வேறொருவருடன் தொடர்பு.! கண்டித்த கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்.! அதிரடி தீர்ப்பு.!

கணவன் இருக்கும்பொழுதே வேறொருவருடன் தொடர்பு.! கண்டித்த கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்.! அதிரடி தீர்ப்பு.!


wife killed her husband for illegal affair

திருவண்ணாமலை மாவட்டம் கரிக்காலம்பாடி கிராமத்தை சேர்ந்த பழனி-விருதம்மாள் தம்பதியினர் திருப்பூர் மாவட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் பழனிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் விருதம்மாளுக்கு ரெட்டிப்பட்டியை சேர்ந்த ராஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதனால் விருதம்மாள் அடிக்கடி ராஜியுடன் செல்போனில் பேசி வந்துள்ளார். இது பழனிக்கு பிடிக்காததால், அவரது மனைவி விருதம்மாளை கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் பழனி மனைவியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விருதம்மாள், ராஜியிடம் கூறி பழனியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Husbandஇந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு மலை கோவில் பகுதிக்கு பழனியும், அவரது மனைவி விருதம்மாளும் வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ராஜியும், விருதம்மாளும் சேர்ந்து பழனியை கழுத்தை நெரித்து கொலை செய்து, தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ராஜியும், விருதம்மாளும் போலீசில் சரண் அடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விருதம்மாளுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், ராஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்பளித்துள்ளனர்.