கணவனுக்கு டிமிக்கி கொடுத்து கல்லூரி மாணவருடன் கள்ளக்காதல்! கண்டித்த கணவன்! இறுதியில் நேர்ந்த பரிதாபம்!



wife killed her husband for her illegal affair


கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள முடிகனம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். விவசாயியான இவருக்கு சித்ரா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். சித்ராவுக்கு கல்லூரி மாணவரான சுதாகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் சித்ராவின் கணவன் மனோகரனுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் மனோகரன் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார்.

இதனால் தங்கள் உறவுக்கு கணவர் தடையாக இருப்பதாக கருதிய சித்ரா, அவரை கொலை செய்ய சுதாகருடன் சேர்ந்து 6 மாத காலமாக திட்டம் போட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி, வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி வருமாறு மனோகரனை சந்தைக்கு அனுப்பியுள்ளார் சித்ரா.

இதனையடுத்து தனது கணவன் சந்தைக்கு வண்டியில் செக்கிறார் என சுதாகரிடம் தெரிவித்துள்ளார் சித்ரா. இதனையடுத்து தனது வீட்டில் இருந்த டிராக்டர் வாகனத்தை எடுத்துக்கொண்டு சுதாகர் சென்றுள்ளார். அப்போது முடிகனம் கருப்புசாமி காடு அருகே மனோகரன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததைக் பார்த்து அவர் மேல் டிராக்டரை ஏற்றிவிட்டு சுதாகர் நிற்காமல் சென்றுள்ளார். 

Murder

பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மனோகரனைப் பார்த்தவர்கள், உடனடியாக அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால், பாதி வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் சிலர் மனோகரனை டிராக்டர் ஏற்றிக் கொன்றது சுதாகர் தான் என போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சுதாகர் மற்றும் சித்ராவை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ‘என் கணவர் என்னை அன்பாக வைத்திருந்தார். வீட்டின் அருகில் வசித்த கல்லூரி மாணவனான சுதாகருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கத்தை என் கணவர் கண்டுபிடித்துவிட்டார். இரண்டு பேரையும் கண்டித்தார். தினமும் இதையே கூறி என்னைத் திட்டினார். இதனால் தான் சுதாகருடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டு கணவனை கொலை செய்தோம் என தெரிவித்தார்.