கணவன் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.! திடீரென வீட்டிற்கு வந்த கணவன்.! அடுத்து நடந்த பயங்கரம்.!

கணவன் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.! திடீரென வீட்டிற்கு வந்த கணவன்.! அடுத்து நடந்த பயங்கரம்.!


wife killed her husband

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி கேட் அருகே மூணாங்கரடு கொத்தடிமை காலனியை சேர்ந்தவர்  ஜீவா. 29 வயது இவருக்கும் கவிதா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி இந்த தம்பதிக்கு 2 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில், கடந்த 16-ஆம் மர்மமாக இறந்து கிடந்துள்ளார். ஜீவாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், தனது கணவர் கடும் போதையில் கீழே தவறி விழுந்து விட்டதாக கதறி அழுதுள்ளார்.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜீவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு   பிரேத பரிசோதனை முடிவில் ஜீவாவின் முகம், வாய், கழுத்து பகுதியில் காயங்கள் உள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் ஜீவாவின் மனைவி கவிதா மற்றும் ஜீவாவின் நண்பரான ராஜா ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஜீவாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும், விசாரணையில், ஜீவாவின் உறவினரின் நிகழ்ச்சிக்கு சென்றபோது, ஜீவாவுக்கும், ராஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ராஜா அடிக்கடி ஜீவா வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் தான் ஜீவாவின் மனைவி கவிதாவுடன் ராஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஜீவா வீட்டில் இல்லாதபோது கவிதா, ராஜா உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்தநிலையில் இந்த கள்ளக்காதல் குறித்து ஜீவாவுக்கு தெரியவந்தது. 

இதனையடுத்து ஜீவா இருவரையும் கண்டித்துள்ளார். இந்தநிலையில் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் ஜீவாவை தீர்த்துக்கட்ட அவர்கள் முடிவு செய்தனர். இந்தநிலையில், கடந்த 16-ஆம் தேதி இரவு வீட்டுக்கு அளவுக்கதிகமான மதுபோதையில் ஜீவா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு கவிதாவும், ராஜாவும் உல்லாசமாக இருந்தனர். இதைப்பார்த்த ஜீவா, அவர்கள் 2 பேரையும் சத்தம்போட்டார். 

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இருவரும் ஜீவாவை தாக்கி அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக அவர் தவறி விழுந்து இறந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து கவிதா, ராஜா இருவரையும் போலீசார் கைது செய்தனர்.