தமிழகம்

கணவர் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த இளம் மனைவி.! துடிதுடித்து போன கணவன்.!

Summary:

சென்னை பம்மல் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன்.  இவருடைய மனைவி சியாமளா. இளம் தம்பதிகளான

சென்னை பம்மல் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன்.  இவருடைய மனைவி சியாமளா. இளம் தம்பதிகளான இருவரும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆவடியில் உள்ள அவர்களது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பின்னர் அன்று இருவரும் இரவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

பைபாஸ் சாலையில் சென்றால் விரைவில் வீட்டிற்கு சென்றுவிடலாம் என்று அவர்கள் பூந்தமல்லி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். அப்போது பூந்தமல்லி அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். 

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சியாமளா, கணவரின் கண் எதிரேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜனார்த்தனன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement