தமிழகம்

தடுமாறி விழுந்த பைக்: கணவன் கண் முன்னே துடி துடித்து இறந்த மனைவி! செங்கல்பட்டு சோகம்!

Summary:

Wife dead in front of husband at road accident

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கம்ருதீன். இவரது மனைவி பாத்திமா கனி. கணவன் - மனைவி இருவரும் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தங்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

வாகனம் செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது. அப்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த தனியார் பேருந்தின் பின் சக்கரம், பாத்திமா மீது ஏறியது.

இந்த விபத்தில் கணவர் கண் முன்னே பாத்திமா உடல்நசுங்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement