மனைவி இருக்கும்போதே வேலைக்காரியுடன் உல்லாசம்.! அதிர்ச்சியடைந்த மனைவியின் பரபரப்பு புகார்.!

மனைவி இருக்கும்போதே வேலைக்காரியுடன் உல்லாசம்.! அதிர்ச்சியடைந்த மனைவியின் பரபரப்பு புகார்.!


wife complaint on husband

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணிற்கும் அவரது அத்தை மகன் முத்து என்பவருக்கும் 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வீட்டிற்கு வேலைக்கு வந்த பெண்ணிடம் தகாத உறவை ஏற்படுத்திக்கொண்டு தன்னை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டுவதாக கணவன் மீது திவ்யா காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

திருமணத்தின் போது வரதட்சணையாக 50 சவரன் நகையும், பல லட்சம் மதிப்புடைய மதிப்புடைய சீர்வரிசை பொருட்களும் வரதட்சணையாக வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சில காலம் வேலைக்கு சென்று கொண்டிருந்த கணவர் வேலையை விட்டு நின்று வீட்டிலேயே இருந்தார். மேலும், கூடுதல் வரதட்சணை கேட்டு திவ்யாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

முத்துவிற்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துவந்ததாக கூறி அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திவ்யா கணவரை பிரிந்து தனது தந்தையுடன் வசித்து வந்த நிலையில், தனது இரண்டாவது குழந்தை பிரசவத்தின் போது வீட்டு வேலைக்கு என்று அழைத்து வரப்பட்ட  ஏஞ்சல் என்ற பெண்மணியுடன் கணவர் முத்து தொடர்பை ஏற்படுத்தி தன்னை துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். 

 மேலும் வீட்டுக்குள்ளேயே வேலைக்கு வந்த பெண்ணுடன்  தவறான உறவில் இருந்ததால் அதை நான் கண்டித்தேன், இதனால் என்னை தனிப்பட்ட முறையில் இருக்கும் போது வீடியோ எடுத்துவைத்து அதை இணையத்தில் வெளியிடுவேன் என கூறி மிரட்டுகிறார். மேலும் ஏஞ்சலுடன் சேர்ந்து திவ்யாவை முத்து கொலை செய்ய முயற்சிப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.