தமிழகம்

சிக்கும் பெண்களை சீரழிக்கும் மன்மதன்.! பல பெண்களின் வாழ்க்கையை காப்பாற்ற மனைவி செய்த காரியம்.!

Summary:

மதுரை சைமனின் மேஸ்ட்ரோ இன்னிசைக்குழுவில் பாடகியாக இருந்தவர் கோபிகா. இவர் அதே குழுவில் இசைக

மதுரை சைமனின் மேஸ்ட்ரோ இன்னிசைக்குழுவில் பாடகியாக இருந்தவர் கோபிகா. இவர் அதே குழுவில் இசைக்கலைஞராக இருந்த மைக் ஸ்டீபன் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்தநிலையில், தனது கணவர் மைக் ஸ்டீபன் மன்மதன் போல வலம் வருவதாகவும், வயது வித்தியாசமின்றி சிக்கும் பெண்களை எல்லாம் மயக்கி காதல் வலையில் சிக்கவைத்து அவர்களது வாழ்க்கையை சீரழித்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை கோபிகா கொடுத்துள்ளார்.

இதுகுறித்து கோபிகா கூறுகையில், கச்சேரிக்கு செல்லும் இடங்களில் பெண்களின் செல்போன் நம்பரைப் பெற்று அவர்களுக்கு காதல் வலை விரித்து சிக்கும் பெண்களுடன் தனிமையில் இருப்பதை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிப் பணம் பறித்து வருவதாகவும் கூறியுள்ளார். இந்த உண்மையை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக தன்னை அவர் மிரட்டி வைத்திருந்ததாகவும், பல பெண்களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் புகார் அளித்துள்ளதாகவும் கோபிகா தெரிவித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


Advertisement