வாரிசு படத்தின் வசூலை கேலி செய்த ப்ளு சட்டை மாறன்.! விஜய் ரசிகர்களால் தாக்குதல்.?!
அரியலூர்: தீராத வயிற்றுவலியால் கண்ணீர் சோகம்.. கணவன், குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் விபரீதம்..!
அரியலூர்: தீராத வயிற்றுவலியால் கண்ணீர் சோகம்.. கணவன், குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் விபரீதம்..!

தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த பெண்மணி, மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் வேப்பங்குழி கிராமத்தில் வசித்து வந்தவர் சிவகுமார். இவரின் மனைவி ஆசைவள்ளி (வயது 32). தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆசைவள்ளி கடந்த சில மாதமாகவே தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதற்காக பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை. இதில் வாழ்க்கையில் வெறுமையடைந்த ஆசைவள்ளி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனைக்கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கீழப்பழுவூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.