தமிழகம்

கல்யாணம் முடிந்து ஒரு வருஷம் ஆச்சு..! கணவனிடம் கேட்டும் அது நடக்கல..! விரக்தியில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு..!

Summary:

Wife commit suicide for husband not satisfying her wish

திண்டுக்கல் மாவட்டம் பண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். ராணுவ வீரரான லட்சுமணனுக்கு அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் திருமணம் முடிந்துள்ளது. திருமணம் முடிந்த சில நாளிலையே மீண்டும் ராணுவத்தில் பணிக்கு சேர்ந்து எல்லைக்கு சென்றுள்ளார் லட்சுமணன்.

இந்நிலையில் லட்சுமணனுக்கு சமீபத்தில் விடுமுறை கிடைத்ததை அடுத்து அவர் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்த இடத்தில் தனது மனைவியை பல இடங்களுக்கு அழைத்து சென்று விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழித்துள்ளார். ஒரு கட்டத்தில் விடுமுறை நாட்கள் முடிந்ததை அடுத்து மீண்டும் பணிக்கு திரும்புவதாக லட்சுமணன் கூறியுள்ளார்.

கணவருடன் தானும் வருவதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கு லட்சுமணன் மறுத்துவிட்டு, மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். இதனால் மன வருத்தத்தில் இருந்துள்ளார் ஈஸ்வரி. இதனிடையே கணவன் தொலைபேசியில் பேசும்போது மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்து ஈஸ்வரி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதனை அடுத்து, தங்கள் மகளின் தற்கொலைக்கு லட்சுமணன்தான் காரணம் என ஈஸ்வரியின் உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.


Advertisement