வீட்டில் தனியாக இருந்த மனைவி! வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவர் கண்ட அதிர்ச்சி காட்சி!

வீட்டில் தனியாக இருந்த மனைவி! வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவர் கண்ட அதிர்ச்சி காட்சி!


Wife commit suicide for family fight

நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் சுமிதா. இவரது முதல் கணவர் இறந்துவிட்ட நிலையில் மூன்று வருடங்களுக்கு முன்பு ஜெயக்குமார் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஜெயகுமாரும் ஏற்கனவே தனது முதல் மனைவியை இழந்துவிட்டார்.

இந்நிலையில் சுமிதா - ஜெயக்குமார் இருவரும் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை ஓன்று உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

Crime

இந்நிலையில் கணவன் ஜெயக்குமார் வேளைக்கு சென்றிருந்த நேரத்தில் சுமிதா தனது தாய் அமுதாவுக்கு போன் செய்து எனது திருமணத்திற்கு போட்ட நகைகளை எடுத்துசெல்லுமாறு கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் மீண்டும் சுமிதாவுக்கு கால் செய்தபோது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை.

இந்நிலையில் வேலை முடிந்து கணவர் வீட்டுக்கு திரும்பியபோது சுமிதா மற்றும் மகன் இருவரும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக தொங்கினர். மனைவி மற்றும் மகனின் உடலை பார்த்த ஜெயக்குமார் கதறி அழுதார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.