சிறப்பு விமானத்தில் சென்னை வந்த மனைவி..! விமானத்தின் லக்கேஜ் அறையில் வந்த கணவனின் சடலம்..! நொடியில் முடிவுக்கு வந்த மூன்று ஆண்டு வாழ்க்கை.!

துபாயில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானம் மூலம் இளம் பெண் ஒருவர் தனது கணவனின் உடலை கொண்டுவந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக விமான போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை இங்கு கொண்டுவர இந்திய அரசு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்தது. அந்த விமானத்தில் 182 தமிழா்கள் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் விமானம் சென்னைதிரும்பியது.
சென்னை திரும்பியவர்களில் கொல்லம்மாளும் ஒருவர். கடந்த மூன்று வருடங்குக்கு முன்பு குமார் (35) என்பவரை திருமணம் செய்துகொண்ட கொல்லம்மாள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது கணவருடன் துபாய்க்கு சென்று அங்கையே செட்டிலாகியுள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய அமீரகத்தின் ராஸ் அல் கைம்மா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் தரக் கட்டுப்பாட்டு மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வந்த குமார் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். காலையில் சாப்பிட்டுவிட்டு பணிக்கு சென்ற குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது அலுவலகத்தில் இருந்து மனைவிக்கு அழைப்பு வந்துள்ளது.
கொல்லம்மாள் மருத்துவமனை சென்று பார்த்தபோது குமார் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக அவரிடம் கூறியுள்ளனர். இதனிடையே தனது கணவனின் உடலுடன் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்துள்ளார் கொல்லம்மாள். இதுவரை தான் எங்கையும் தனியாக சென்றது இல்லை. இதுவே நான் தனியாக வரும் முதல் பயணம். என்னை வாழ்நாள் முழுவதும் தனியாக விட்டுவிட்டு எனது கணவர் சென்றுவிட்டார் என கொல்லம்மாள் கூறி அழுதது அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.